Saturday, November 06, 2004

பல்லவியும் சரணமும் - V I

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே! 'பழைய பாடல் Blogger புலிகள்' தான் பல உலவுகின்றனவே! 'kudigaaranin uLaRaLgaL' வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர், Icarus Prakash, Singai Anbu மற்றும் சந்திரவதனா ஆகியோருக்கும் இப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதி உண்டு :-))

1. சொர்க்கமும் நரகமும் நம் வசமே, நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே ...
2. வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன் ...
3. ... ஏந்தி வாருங்கள் தீபங்களே, கரைந்தோடும் நோய் என்னும் பாவங்களே ...
4. வீழும் கண்ணீர் துடைத்தாய், அதில் என் விம்மல் தணியுமடி ...
5. கூனல்பிறை நெற்றியில் குழலாட, கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட ...
6. காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு, கருணை என்றொரு பேரெதற்கு ...
7. உன் பார்வை போலே என் பார்வை இல்லை, நான் கண்ட காட்சி ...
8. எங்கோ வாழ்க்கை தொடங்கும், அது எங்கோ எவ்விதம் முடியும் ...
9. ... பட்டு விடும் மேனி, சுட்டு விடும் நெருப்பு, சூனியத்தின் நிலைப்பு ...
10. நீ எந்தன் கோயில், நான் அங்கு தெய்வம், தெய்வத்தின் முன்னே ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

9 மறுமொழிகள்:

Chandravathanaa said...

ellam theriyum pollulathu.
aanal kananithan makkar pannukirathu.
viraivil varukiren.

Jayaprakash Sampath said...

அய்யோ நான் வரலை இந்த ஆட்டத்துக்கு 7.( பெண்ணொன்று கண்டேன் ), 8. ( நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.. ) தவிர எதுவும் சட்டென்று நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது :-)

Chandravathanaa said...

எனது கணினி சொல்லாமல் கொள்ளாமல் நிற்கிறது.
அதனால் முடிந்ததை மட்டுமே எழுதுகிறேன்

1 - கலைமகள் கைப்பொருளே உன்னைக் கவனிக்க ஆளில்லையோ
விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ
படம் - வசந்தமாளிகை

2 - பாலூட்டி வளர்த்த கிளி
பழம் கொடுத்துப் பார்த்த கிளி
கௌரவம் அல்லது ---

Chandravathanaa said...

எனது கணினி சொல்லாமல் கொள்ளாமல் நிற்கிறது.
அதனால் முடிந்ததை மட்டுமே எழுதுகிறேன்

1 - கலைமகள் கைப்பொருளே உன்னைக் கவனிக்க ஆளில்லையோ
விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ
படம் - வசந்தமாளிகை

2 - பாலூட்டி வளர்த்த கிளி
பழம் கொடுத்துப் பார்த்த கிளி
கௌரவம் அல்லது ---

Chandravathanaa said...

1 - கலைமகள் கைப்பொருளே உன்னைக் கவனிக்க ஆளில்லையோ
விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ
படம் - வசந்தமாளிகை

2 - பாலூட்டி வளர்த்த கிளி
பழம் கொடுத்துப் பார்த்த கிளி
படம - கௌரவம் அல்லது ---

4 - உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
படம் - வியட்நாம்வீடு

6 - கண்ணா கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
படம் - நானும் ஒரு பெண்

7 - பெண்ணொன்று கண்டேன் ...ங்கு இல்லை
என்னென்று நான் சொல்வதோ

8 - நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

9 - வீடு வரை உறவு வீதி வரை மனைவி

10- உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

enRenRum-anbudan.BALA said...

சந்திரவதனா,

பத்தில் ஏழு சரியாகச் சொன்னீர்கள்! 6-வதுக்கு விடை தவறு. Icarus பிரகாஷ் சரியாக முயற்சி செய்யவில்லை என எண்ணுகிறேன் :-( அடுத்த முறை பிய்த்து விடுவார் என்று எதிர்பார்க்கிறேன் :-) நீங்கள் கூறாதவற்றுக்கு விடைகள் இதோ!

3. ... ஏந்தி வாருங்கள் தீபங்களே, கரைந்தோடும் நோய் என்னும் பாவங்களே --- இசை கேட்டால் புவி அசைந்தாடும், அது இறைவன் அருளாகும், ஏழாம் கடலும், வானும் நிலவும் என்னுடன் விளையாடும் ...

5. கூனல்பிறை நெற்றியில் குழலாட, கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட --- மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள், வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள், காதல் மழை பொழியும் கார்முகிலாள், இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாள் ...

6. காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு, கருணை என்றொரு பேரெதற்கு --- முத்து நகையே உன்னை நான் அறிவேன், தத்தும் கிளியே என்னை நீ அறிவாய் நம்மை நாம் அறிவோம் ...

என்றென்றும் அன்புடன்
பாலா

Chandravathanaa said...

பாலா

மூன்றுமே நான் ரசித்துக் கேட்கும் பாடல்கள்.
ஆனாலும் நேற்று ஏனோ நினைவில் வர மறுத்து விட்டன.

நட்புடன்
சந்திரவதனா

Ganesh said...

Bala Super postings.
I am going to link your site.

KK Nagar Kirukkan

enRenRum-anbudan.BALA said...

Dear KKirukkan,
Thanks for your kind appreciation on my writings and linking my blog.
enRenRum anbudan
BALA

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails